ஒருசமயம் திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்தபோது, மஹாலக்ஷ்மி இத்தலத்திற்கு வந்து தங்கினார். 'திரு'வாகிய லக்ஷ்மி எழுந்தருளியதால் இந்த ஸ்தலம் 'திருநின்றவூர்' என்ற பெயர் பெற்றது.
மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் சுதாவல்லி, என்னைப் பெற்ற தாயார் ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். வருணனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இந்த ஸ்தலத்திலேயே திருமகள் தங்கியதால் அவளது தந்தையான சமுத்திரராசனும், அவனது துணைவியாரும் இங்கு வந்து 'என்னை பெற்ற மகளே' அழைத்ததால் இத்தலத்து தாயார் 'என்னைப் பெற்ற தாயார்' என்னும் சிறப்பு திருநாமம் பெற்றார்.
வராகப் பெருமாள் தோன்றியதால் வராஹ க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் ஏரிகாத்த ராமர் கோயிலும், இருதயாலீஸ்வரர் சிவன் கோயிலும் உள்ளது.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|